உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்ககுதலுக்கு காரணமான சூத்திரதாரிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் நேற்றைய தினம்(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டு வருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்களை திசை திருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்தோம். இன்னமும் அந்த வேதனை அடைகிறோம். காத்தான்குடி பிரதேசம் அநியாயமாக பல சோதனைகளையும் சவால்களையும் சந்திந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தற்போது தான், சில உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. யார் பின்னணியில் இருந்தார்கள், யார் இதை செய்தார்கள் போன்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றது.
அத்தோடு, இந்த குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |