ஈஸ்டர் குண்டுத்தாக்குல் பாதிக்கப் பட்ட நிரபராதி ஆமி முகம்மதின் இன்றைய நிலை (Video)
நிரபராதியாகிய தன்னை குற்றவாளிகள் போன்று நடத்தியதாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் குண்டுத் தாக்குதல் நடத்தியதற்குக் குண்டை வெடிக்கவைக்க உதவியதாகக் கைது செய்யப்பட்ட தன்னை, மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தினை காட்டியே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தான் கைது செய்யப்பட்டு நிரபராதியென விடுதலையான பின்னர் தன்னுடன் கதைப்பதற்கு ஏனையவர்கள் அஞ்சும் நிலை காணப்படுவதுடன் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் அவர்களின் ஊடக சந்திப்பு காலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,