இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : வெளியான எச்சரிக்கை

Tsunami Sri Lanka Sri Lankan Peoples Earthquake
By Laksi Mar 29, 2025 09:34 AM GMT
Laksi

Laksi

என்றோ ஒருநாள் இலங்கையிலும் பாரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது.

போராட்டத்தில் குதித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

போராட்டத்தில் குதித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

நிலநடுக்கம்

இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.

இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : வெளியான எச்சரிக்கை | Earthquake Warning In Sri Lanka

நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கை எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன.

சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோதமாக மருந்துகள் இறக்குமதி: தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை

விழிப்புணர்வு செயற்திட்டம்

ஆகக் குறைந்தது நிலநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் : வெளியான எச்சரிக்கை | Earthquake Warning In Sri Lanka

இல்லையேல் 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு நிலநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை என கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW