துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!

Turkey Earthquake Turkey Earthquake
By Fathima Jan 24, 2026 09:53 AM GMT
Fathima

Fathima

துருக்கியில் இன்று 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி எர்லிகயா உறுதிப்படுத்தி உள்ளார்.

துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால மேலாண் மையமும் இதனை உறுதி செய்துள்ளது.

நிலநடுக்கம்

இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில்,''துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! | Earthquake In Turkey 

இந்த நிலநடுக்கம் 11.04 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதில், யாருக்கும் பாதிப்பு அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டு இருக்கிறதா? என உறுதி செய்வதற்காக உடனடியாக அதற்கான குழுக்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. கள ஆய்வு பணிகளும் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் திகதி, இதே சிந்திர்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.''என கூறியுள்ளார்.