இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்
இலங்கையின் தென்கிழக்கே இந்து சமுத்திர பெருங்கடலில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (01.06.2023) மதியம் 12.59 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காலி, அக்குரஸ்ஸ, கொழும்பு, களுத்துறை, பாணந்துறை , வெள்ளவத்தை, பெபிலியான, நெலுவ, பத்தரமுல்லை உள்ளிட்ட கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தின் மையம்
இந்த நிலநடுக்கத்தின் மையம் கொழும்பில் இருந்து 1260 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இது தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தீவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.