ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு..!
ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் தாஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்று (19) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சேதமும் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம்
அதேவேளை, இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் பல பகுதிகள் மற்றும் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் கைபர் பக்துன்வா உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன கடந்த சனிக்கிழமை நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் சில பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |