உயரமான கட்டடங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலநடுக்கங்கள் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள உயரமான கட்டடங்களில் பாதிப்பு ஏற்படலாம் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள புதிய மற்றும் பழைய உயரமான கட்டடங்களை வகைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகவே இந்நிலை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாண கட்டடங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.
மேல் மாகாணத்திலுள்ள கட்டடங்கள் நிலவமைப்புக்கு ஏற்ப வடிவமைக் கப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குரியது மற்றும் நில நடுக்கங்களுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்டுள்ளனவா என்பதனை ஆராய வேண்டியுள்ளது.
கட்டடங்களின் அடித்தளம் உரிய முறையில் இடப்பட்டுள்ளனவா என்பதன் அடிப்படையில் ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.