பிளாஸ்டிக் கழிவு வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும்! புதிய திட்டம் நடைமுறைக்கு

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Mar 19, 2025 08:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி (Electronic Tree-Wheeler – E-Tuk) அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்சார முச்சக்கர வண்டி திட்டம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

தங்கம் வாங்கவுள்ளேருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

பணம் வழங்கப்படும்

இதன் தொடக்க விழா நேற்று பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும்! புதிய திட்டம் நடைமுறைக்கு | E Tree Wheeler E Tuk In Sri Lanka

இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும் எனவும் பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW