யாழ். கோட்டையை மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்கள்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

Jaffna Sri Lanka Tourism Tourism P. S. M. Charles
By Independent Writer May 03, 2024 01:11 PM GMT
Independent Writer

Independent Writer

Courtesy: Kanagasooriyan Kavitharan

யாழ். (Jaffna) நகரின் முக்கிய சுற்றுலாத் தலமான கோட்டையை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நேற்று (02.05.2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"யாழ். கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சூழலை சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

சுற்றுலா தளம் 

யாழ். மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்க வேண்டும். 

யாழ். கோட்டையை மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்கள்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Dutch Fort Jaffna Tourist Spot

அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுதல் அவசியம். 

வரலாற்றுச் சின்னமாக காணப்படும் கோட்டையை பாதுகாப்பதற்கும், அதனூடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். 

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய வேண்டும். 

அதேவேளை, தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாச்சார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.