துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி

By Thulsi Jan 18, 2024 03:17 AM GMT
Thulsi

Thulsi

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா ஜயவர்தன புர வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற  தீர்ப்பு 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி | Duminda Silva Admited In Hospital

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டரீதியானதல்ல என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் துமிந்த சில்வா ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்மை குறிப்பிடத்தக்கது.