காஸா மக்களுக்காக துஆ..!

Ramadan Sri Lankan Peoples Palestine Gaza
By Rakshana MA Mar 19, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் அனைவரும், இம்மாதத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நல்லமல்களுக்குப் பின்னரும் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் துஆக்களில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை வாழ் மக்களுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.

குறிப்பாக பஜ்ருத் தொழுகையின் குனூத்திலும், வித்ருத் தொழுகையின் குனூத்திலும், மஃமூம்களுக்கு சடைவில்லாதவாறு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

துஆ

உலமா சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கடந்த சில தினங்களாக மீண்டும் பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம்.

காஸா மக்களுக்காக துஆ..! | Duas For Gaza People

அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக.

இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.

ஆகவே, புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு,  இலங்கைவாழ் முஸ்லிம்களையும் மஸ்ஜித் இமாம்களையும் வேண்டிக்கொள்கிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 • اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ

• اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ • اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ

• اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

• اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ 

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

சிறந்த முன்மாதிரி போட்டியில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அரசினர் பாடசாலை

சிறந்த முன்மாதிரி போட்டியில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அரசினர் பாடசாலை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery