கிண்ணியாவில் பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனை

Iran Ebrahim Raisi
By Mayuri Jun 28, 2024 04:33 AM GMT

பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும், ஈரான் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற ஷஹீத் இப்ராஹிம் ரைஸிக்கான கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும் கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த நிகழ்வு நேற்று (27.06.2024) மாலை கிண்ணியா விஷன் மண்டபத்தில் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 

நிகழ்விற்கான தலைமை

கிண்ணியா மனித நேயத்துக்கான சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அதன் தலைவர் முஹம்மது சகித் தலைமை வகித்துள்ளார். 

கிண்ணியாவில் பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனை | Dua Prayer For The People Of Palestine

இதில் உலமாக்கள் பள்ளிவாசல் சம்மேளணங்களின் தலைவர், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கத் தலைவர்கள் அதன் உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW