போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் கைது

Sri Lanka Police Ampara Iftar
By Fathima Apr 13, 2023 06:50 PM GMT
Fathima

Fathima

புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் சுற்றிவளைப்பு புதன்கிழமை(12) இரவு மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் கைது | Drug Use Ampara Sri Lanka Police

இதன் போது 9 சந்தேகநபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery