இலங்கையில் ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
Sri Lanka
Sri Lanka Government
Iran
Law and Order
By Fathima
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒன்பது ஈரானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
இந்த 9 ஈரானியர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.
கைதி பரிமாற்ற உடன்படிக்கை
இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த ஈரானியர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளது.
எவ்வாறாயினும், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில், ஈரானியர்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.