சுற்றிவளைப்பில் சிக்கிய கெஹெல்பத்தர உள்ளிட்ட 6 பேர்!

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Dharu Aug 28, 2025 07:44 AM GMT
Dharu

Dharu

கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும்  கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பாதாள உலக உறுப்பினர்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகசபராக கருதப்பட்ட கெஹெல்பத்தர பத்மே,  கமாண்டோ சலிந்த ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

குறித்த கைது நடவடிக்கை நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சுற்றிவளைப்பில் சிக்கிய கெஹெல்பத்தர உள்ளிட்ட 6 பேர்! | Drug Lords Arrested In Indonesia

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டோ சலிந்த என்ற பெயரில் அறியப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழு 

மற்ற இருவரில் ஒருவர் கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படும் பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றிவளைப்பில் சிக்கிய கெஹெல்பத்தர உள்ளிட்ட 6 பேர்! | Drug Lords Arrested In Indonesia

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகிய இருவரும் கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தின் உள்ளே வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலையின் சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.