வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையை பொறுப்பேற்றுள்ளார்
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Fathima
மகப்பேற்று வைத்திய நிபுணரான ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் Senior House Officer ஆக இன்று(30.05.2023) கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
'சிங்கள இனப்பெருக்கத்தை சீரழிக்க பெண்களை மலடாக்கியவர்' என்று கடந்த காலங்களில் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஷாபி ஷிஹாப்தீனை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு நீதிமன்றுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இறுதியில் இவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டதுடன் அவரது சம்பளமும் திரும்ப கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
