டொக்டர் ருக்சான் பெல்லனவின் சேவை இடைநிறுத்தம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லனவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த மருத்துவ அதிகாரி என்ற வகையில் ஊகடங்களில் சர்ச்சைக்குரியயும் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படக்கூடியதுமான கருத்துக்களையும் வெளியிடுவதாக டொக்டர் பெல்லன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச சேவை ஆணைக்குழுவின் சேவைக்குழுவின் விசேட கடிதமொன்றின் அடிப்படையில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

டொக்டர் பெல்லனவின் பொறுப்பில் இருக்கும் பொருட்கள் ஆவணங்களை உரிய முறையில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேவை இடைநிக்கம் செய்யப்பட்ட காலப் பகுதியில் வெளிநாடு செல்லக் கூடாது எனுவும் இருப்பிடத்தை மாற்றினால் அது குறித்து அறிவிக்க வேண்டமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
டொக்டர் பெல்லன கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.