யாழில் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும்! டக்ளஸ் வலியுறுத்து

Jaffna Douglas Devananda Ceylon Electricity Board Northern Province of Sri Lanka
By Madheeha_Naz May 07, 2024 09:48 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

யாழ். நெடுந்தீவு (Jaffna) பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலை உறுதி செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை பின்சார சபையின் மூலமாக நெடுந்தீவு பகுதி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டதால் மக்கள்  பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது.

தடையற்ற மின்சாரம்  

இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம் என துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விடயம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னேடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்யுமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, தற்போது மின் பிறப்பாக்கிகள் சீர் செய்யப்பட்டு மின்சார சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, 

"தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதிகூடிய வெப்ப நிலையும் காணப்படுகின்றது.

முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை 

இதனால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏது நிலைகள் அதிகளவில் உள்ளன.

douglas-talked-on-electricity-supply-in-jaffna-

அதுமட்டுமல்லாது, மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மேலும்,  நாடு முழுவதும் இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது.

அந்தவகையில், எதுவித தடைகளும் ஏற்படாத வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும். அதேநேரம் இப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள் மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.