களுத்துறையில் இருவர் வெட்டிப் படுகொலை - பொலிஸார் நடவடிக்கை
பலாதொட்ட - கொடபராகாஹேன பகுதியில் நபரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 43 வயதுடைய சுஜித் தர்மசேன என்ற நபரே நேற்றிரவு(16.06.2023) இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்ற வேளையிலேயே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை களுத்துறை-பெலவத்தை நகரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனமொன்றுக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவரை சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொகரதுவ, பெலவத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.