வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Mayuri Sep 18, 2024 03:04 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரஜைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதற்கான அவசியம்

அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும், தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம்.

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Dont Panic In Election

வன்முறைகள் இதேவேளை தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை.

வன்முறைகள், அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW