சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு

Ampara Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Apr 04, 2025 01:05 PM GMT
Laksi

Laksi

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் வைத்தியசாலையின் உயர் சார்பு (High Dependency Unit (HDU) பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார்.

இதன் போது குறித்த பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒரு சில மருத்துவ தளபாடங்களை தந்துதவுமாறு பிராந்திய பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மருத்துவ தளபாடங்கள் 

மிகவும் அவசரத் தேவையாக உள்ள விடயங்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக பணிப்பாளர் இதன்போது உறுதியளித்தார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு | Donation Medical Furniture Sammanthurai Hospital

அதற்கமைவாக பிராந்திய பணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மருத்துவ தளபாடங்கள் குறித்த தினமே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பீ.பிரபாசங்கர் High Dependency Unit (HDU) பிரிவுக்கு கையளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW