கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ள இலவச மூக்குக்கண்ணாடிகள்
Eye Problems
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka NGO
By Kiyas Shafe
கிண்ணியா பிரதேசத்தில் மூக்கு கண்ணாடி தேவையுடைய 50 பேருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று(11) மாலை, கிண்ணியா விஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. ஆர். எம். சைபுள்ளாஹ் தலைமையில், விஷன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பு மேமன் சங்கத்தின் ஒத்துழைப்புடன், கிண்ணியா விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலவச கண்ணாடி விநியோகம்
மேலும், இதில் கிண்ணியா தள வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ. எம். எம். ஜிப்ரீ பிரதம அதிதியாக கலந்து கொண்டு, கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |