ஈரான் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார் - ஆனால்...! டிரம்ப் தகவல்

Iran Iran-Israel Cold War Iran-Israel War Iran-US Conflict
By Amal Mar 13, 2026 10:09 AM GMT
Amal

Amal

ஈரானின் புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவர் போரில் பாதிக்கப்பட்டுள்ளார் (Damaged)" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான சொத்து வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான சொத்து வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

பொதுவெளியில் தோன்றாத மொஜ்தபா கமேனி

கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. நேற்று அவர் விடுத்த முதல் அறிக்கையைக் கூட ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளரே வாசித்தார்.

அவர் போரில் காயமடைந்தவர் என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி விவரித்துள்ளது. எனினும், அவர் தொடர்ந்து பணிகளைச் கவனித்து வருவதாக ஈரான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார் - ஆனால்...! டிரம்ப் தகவல் | Donald Trump Statement About Methba Kameni

முதல் உரை

தனது முதல் உரையில், ஹோர்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைத்திருப்பதாக மொஜ்தபா கமேனி உறுதிபூண்டுள்ளார். மேலும், அண்டை நாடுகள் தங்கள் மண்ணில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூடாவிட்டால், அந்த நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் உலகப் பொருளாதாரச் சரிவுக்கும் மத்தியில், மூன்று நாடுகளின் தலைவர்களும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்தியப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்தியப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்