இன்றைய நாணய மாற்று விகிதம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Money Dollars
By Benat Jan 24, 2025 10:20 AM GMT
Benat

Benat

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(24) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 294.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 294.41ரூபாவாக குறைவடைந்துள்ளது.

விற்பனைப் பெறுமதி

இந்த நிலையில், நேற்றையதினம் 303.24 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 303.10ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம் | Dollar To Sri Lankan Rupee Exchange Rate

மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 376.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.67 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 318.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.92 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 212.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.01ரூபாவாகவும், விற்பனை பெறுமதி193.23ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.