இலங்கையில் அதிகரிக்கப்போகும் டொலரின் பெறுமதி! மதிப்பீட்டில் வெளிவந்துள்ள விடயம்

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee President of Sri lanka Harsha de Silva Dollars
By Fathima Jun 23, 2023 11:58 PM GMT
Fathima

Fathima

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

 நாட்டின் தனிநபர் வருமானம்

அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது.

இலங்கையில் அதிகரிக்கப்போகும் டொலரின் பெறுமதி! மதிப்பீட்டில் வெளிவந்துள்ள விடயம் | Dollar Rate Today In Sri Lanka

அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும்.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.