ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! டொலர்களை கொள்வனவு செய்த மத்திய வங்கி
மத்திய வங்கி கடந்த வாரங்களில் சந்தையில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது என பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (25.05.2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாணய விகிதங்களில் ஏற்ற இறக்கம்
ரூபாவின் பெறுமதியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
ரூபாவின் பெறுமதியானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதால், சில தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை நாணய விகிதங்களில் படிப்படியாக ஏற்ற இறக்கத்தை அனுமதிக்க கணக்கிடப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.”என தெரிவித்துள்ளார்.