ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Dollars
By Madheeha_Naz Jun 13, 2023 09:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(13.06.2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக  அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.

எனினும், கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி   வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.  

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி | Dollar Rate In Sri Lanka Today

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (13.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  309.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை  294.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம் நேற்றையதினம்(12.06.2023), அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.73 ரூபாவாகவும், கொள்வனவு விலை  290.06 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. 

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி    334.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  316.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி    388.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  368.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


Gallery