மாத்தறையில் கடலில் நீராட சென்ற வைத்தியர் பலி
கடலில் மூழ்கி வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஸ்ஸ கடலில் நேற்று(25.12.2025) நீராடிக் கொண்டிருந்த வைத்தியரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வெலிகம - வலான பகுதியில் உள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் 49 வயதுடைய தலைமை வைத்தியரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி வைத்தியர், கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, கடலலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அவரை மீட்டு, மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வைத்தியர் ஒரு மாதத்துக்கு முன்பு தான் மாத்தறை வைத்தியசாலையில் பணிபுரியத் தொடங்கினார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.