தாமே பதவி விலகுவதாக வைத்தியர் அர்ச்சுனா அறிவிப்பு
என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன் என வைத்தியர் அர்ச்சுனா (Archuna) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "விடுதலை புலிகள் என காணாமல் ஆக்கப்பட்ட 44000 பேருடன் என்னையும் ஒருவன் என சொன்னால் அது எனக்கு பெருமிதமே.
அந்த வழியில் என்னை கைது செய்ய முற்படுகின்றீர்களாயின் அதையும் தாராளமாக செய்து கொள்ளுங்கள்.
மேலும், என்னை பதவியில் இருந்து விலக்க நினைக்கின்றீர்கள் என்றால் அதை நீங்கள் செய்ய வேண்டாம். நானே விலகிக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்
கடந்த சில நாட்களாக சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் இந்த நிலையில், குறித்த வைத்தியசாலையில் பொறுப்பேற்றுக் கொண்ட வைத்தியர் அர்ச்சுனா அங்கு இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படாத சேவைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
வைத்தியசாலையில், உள்ள குறைபாடுகள் தொடர்பில் வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும், அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாக வைத்தியர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |