அர்சுனா இராமநாதனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Sri Lankan Tamils Mannar Sri Lanka Police Investigation Dr.Archuna Chavakachcheri
By Mayuri Aug 03, 2024 10:35 AM GMT

சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு

அவர் மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்சுனா இராமநாதனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு | Doctor Archuna Arrested By Police

அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில் வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW