கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும்: விசர் நாய் கடி தொடர்பில் எச்சரிக்கை
விசர் நாய் கடிக்கும் போது கட்டாயமாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.
விசர் நாய் கடி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசர் நாய் கடிக்கு உள்ளாகும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் உடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவதானமாக இருக்க வேண்டும்
வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.
ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |