தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 25, 2024 07:09 AM GMT
Laksi

Laksi

தபால் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் (26) தபால் நிலையங்களுக்கு விநியோகம் செய்யவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து்ள்ளது.

அத்தோடு, எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

வாக்காளர் அட்டை விநியோகம்

இதனையடுத்து, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு! | Distribution Of Postal Ballots Election Commission

இந்தப் பணிகளுக்கான விசேட தினமாக செப்டெம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW