களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதி வழங்கி வைப்பு
Batticaloa
Sri Lankan Peoples
Climate Change
Eastern Province
Floods In Sri Lanka
By Rakshana MA
களுவாஞ்சிக்குடி(Kaluwanjikudy) பகுதியில் தனியார் கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொதிகள் வழங்கி வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணப்பொதி வழங்கும் திட்டமானது, இன்று(12) கழகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நிவாரணப்பொதி
மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற தெரிவு செய்யப்பட்ட 51 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பால்மா, பிஸ்கட் போன்ற தலா 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் களுவாஞ்சிக்குடி தனியார் கழகத்தின் தலைவர், அக்கழகத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |