இருவருக்கிடையிலான தகறாரில் அடித்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு நபர்
அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார் என குறிப்பிபட்டுள்ளனர்.
விசாரணை
சம்பவ தினத்தன்று, கோழி பண்ணையில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது சந்தேக நபர் சக ஊழியரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |