மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Mannar Strike Sri Lanka
By Mayuri Aug 29, 2024 09:48 AM GMT

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக இன்று அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பிற்கான காரணம்

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை, மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள உள்ளதோடு ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ குறிப்பிட்டுள்ளார். 

GalleryGallery