ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 24, 2024 11:45 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

முறைப்பாடுகள் அதிகரிப்பு

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 474 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள் | Disgruntled Over Rising Election Complaints

அவற்றில் சட்டத்தினை மீறியமை குறித்து 450 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW