கிழக்கு மாகாண அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் : தெளிவூட்டப்பட்ட விடயங்கள்
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று நேற்று(20) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், அரச நிறுவனங்கள் மட்டத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துதல், இதற்காக அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக திணைக்கள தலைவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்
மேலும், மாகாண சபையில் வீண் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் , நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |