பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ள இராணுவத்தின் துப்பாக்கிகள்

By Dharu Jan 20, 2025 12:33 AM GMT
Dharu

Dharu

இலங்கை இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று இ்டம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

38 ஆயுதங்கள் 

திருடப்பட்ட ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாகவும், எஞ்சிய துப்பாக்கிகள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் பரவலான சீர்கேட்டை உருவாக்கியதற்காக முன்னைய நிர்வாகத்தை விமர்சித்த ஜனாதிபதி, இது தற்போதைய பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பங்களித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.