ஆளுநர் செந்தில் - கல்வி அமைச்சர் சுசில் சந்திப்பு: ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பேச்சு

A D Susil Premajayantha Senthil Thondaman Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Mubarak Jul 24, 2023 12:10 PM GMT
Mubarak

Mubarak

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடல் இன்று (24.07.2023)  இடம்பெற்றுள்ளது. 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு

ஆளுநர் செந்தில் - கல்வி அமைச்சர் சுசில் சந்திப்பு: ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பேச்சு | Discussion Senthil Thondaman Sushil

அதன் அடிப்படையில் சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.