ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Laksi Jan 06, 2025 02:30 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் கவலைக்கிடம்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் கவலைக்கிடம்

மக்களின் எதிர்பார்ப்புகள்

நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி அநுர வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் | Discussion President Anura And Attorney General

அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனையில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

மீளமைக்க நடவடிக்கை 

அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும், சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் | Discussion President Anura And Attorney General

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW