பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்
Ampara
Hospitals in Sri Lanka
Kalmunai
By Laksi
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது, வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அபிவிருத்தி
இந்த நிலையில், வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிரும் கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |