மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

Mannar Sri Lanka
By Madheeha_Naz Jan 20, 2024 07:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான முன் ஆயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்தரையாடலானது நேற்று (19.01.2024) மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

இதன்போது எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் | Discussion Independence Day Event Held In Mannar

மேலும், மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுதந்திர தின நிகழ்வுகள் குறித்தும் அரசாங்க அதிபரினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திணைக்கள தலைவர்கள், முப்படை அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.