கொழும்பு மாவட்டத்தில் 221க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை
கொழும்பு மாவட்டத்தில் 221க்கும் மேற்பட்ட பகுதிகள் அனர்த்த நிலைக்கு உள்ளதாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அனர்த்த நிலை
நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்த நிலையை போன்று கொழும்பு மாவட்டத்திலும் பேரிடர் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கு கடந்தகால ஆட்சியாளர்களே பொறுப்பானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
எந்தவொரு கட்டுப்பாடும் விசாரணையும் இல்லாமல் கட்டுமானம், மண் மேடுகளை வெட்டுதல் மற்றும் மணல் அகற்றுதல் ஆகியவற்றிற்கு கடந்த கால அரசாங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
அபாயம்
இவ்வாறான நிலைமை காரணமாக நாட்டில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்கால அரசாங்கங்களின் தவறுகளால் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை சமகால அரசாங்கமும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற நாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து கிராமம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் பேரிடர் மேலாண்மை சுயவிவரத் திட்டத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.