அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட நிதி உதவி

Landslide In Sri Lanka Floods In Sri Lanka School Children Disaster
By Fathima Dec 03, 2025 07:47 AM GMT
Fathima

Fathima

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட நிதி உதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.

நிதி உதவி

இதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட நிதி உதவி | Disaster Scholarship For Students

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இந்த நிதி உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.