இயக்குனர் காமினி பிரியந்த, கடத்தப்பட்டு கொடூரமாக தாக்குதல்

Colombo Sri Lanka
By Nafeel May 06, 2023 02:23 AM GMT
Nafeel

Nafeel

தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த நேற்று  (05) வெலிமடை நகரில் சிலரால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஹப்புத்தளை வீதியில் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும், கடத்தப்பட்ட போது வாகனத்தில் வைத்து தாக்கப்பட்ட காட்சிகளையும் பொலிசார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர். வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.