இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் நேரடி விமான சேவை
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி எயார்லைன்ஸ் இஸ்தான்புல், துருக்கி மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான இணைப்புகளை அக்டோபர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் ஐரோப்பாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இதன் மூலம், விமானப் பயணிகள், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து உலகின் 129 நாடுகளுக்கு குறுகிய விமான இணைப்பு நேரத்தின் மூலம் எளிதாகப் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |