ஈரானியர்கள் ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிவதில்லை - அராக்சி அறிக்கை
ஈரானியர்கள் ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிவதில்லை, இராஜதந்திரம் எப்போதும் பலியாகிறது என ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, (மே 7, 2026-ல் நடைபெற்ற தாக்குதல்கள்) ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலின் பின்னர் வெளியுறவு அமைச்சர் அராக்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு முறையும் ஒரு இராஜதந்திரத் தீர்வு முன்வைக்கப்படும்போது, அமெரிக்கா ஒரு பொறுப்பற்ற இராணுவ சாகசத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இது ஒரு அப்பட்டமான அழுத்த உத்தியா? அல்லது, ஒரு குழப்பவாதி மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபரை மற்றொரு சிக்கலில் சிக்க வைப்பதன் விளைவா?
காரணங்கள் எதுவாக இருந்தாலும், விளைவு ஒன்றுதான்: ஈரானியர்கள் ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிவதில்லை, இராஜதந்திரம் எப்போதும் பலியாகிறது.
மேலும், சிஐஏ சொல்வது தவறு. பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது, நமது ஏவுகணை இருப்பு மற்றும் ஏவுதளத் திறன் 75% ஆக இல்லை. சரியான எண்ணிக்கை 120% ஆகும்.
நமது மக்களைப் பாதுகாப்பதற்கான நமது தயார்நிலையைப் பொறுத்தவரை 1,000 % ஆக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.