ஜனவரி முதல் நாட்டில் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காயிரம் கோடி ரூபாய் பெருமதியான இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில் கண் கருமை, கைரேகை, இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களும் உள்ளடக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற ஆறு விண்ணப்பங்கள் மட்டுமே தேவை என ஆட்பதிவு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அடையாள அட்டை
அதன்படி, புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கி, பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.