13 வருடங்களாக ஆற்றுக்குள் கிடந்த கமராவில் இருந்து கிடைத்த அதிசயம்

United States of America
By Chandramathi Mar 31, 2023 11:46 PM GMT
Chandramathi

Chandramathi

13 வருடங்களாக ஆற்றுக்குள் கிடந்த பழைய டிஜிட்டல் கமரா அமெரிக்காவிலுள்ள கொலராடோ ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கமராவை ஸ்பென்சர் கிரெய்னர் ஆற்றிலிருந்து கண்டுப்பிடித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்பென்சர் கிரெய்னர் கருத்து தெரிவிக்கையில்,"நான் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும் இடங்கள் ஒவ்வொன்றாக நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

வசந்த காலம் தொடங்கியிருந்ததால் பனிக்கட்டிகள் உருகி அதற்கு அடியில் சிக்கியிருந்த குப்பைகள் சிறிது சிறிதாக மேலே வந்துகொண்டிருந்தன.

13 வருடங்களாக ஆற்றுக்குள் கிடந்த கமராவில் இருந்து கிடைத்த அதிசயம் | Digital Camera Discovered In Us

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட படங்களும் வீடியோக்களும்

அந்த குப்பைகளை சேகரித்துத் பையில் போட்டுக் கொண்டிருந்த போது குப்பைகளுக்கு நடுவில் கமராவை போல் ஒன்று கிடந்தது. அது அங்கு நீண்ட நாட்களாகக் கிடப்பது பார்த்த உடனேயே தெரிந்தது.

வீட்டிற்குத் திரும்பி வந்ததும் அதில் ஏதாவது விஷயம் உள்ளதா என்று பரிசோதித்தேன்.

அதிசயிக்கும் வகையில், அதிலிருந்த படங்களும் வீடியோக்களும் அப்படியே இருந்தன.”என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்பென்சர் அவற்றில் சில புகைப்படங்களை உள்ளூர் முகப்புத்தக குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.