பொறுப்புக்களை ஏற்கவுள்ள தயாசிறி: இடையூறு விளைவிப்பவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Colombo Dayasiri Jayasekara
By Mayuri Jul 05, 2024 02:59 AM GMT

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்றைய தினம் (05) பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி விடுத்துள்ள எச்சரிக்கை

தமது பதவியேற்பு நிகழ்விற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்களை ஏற்கவுள்ள தயாசிறி: இடையூறு விளைவிப்பவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Dhayasiri Warning

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW